போலீஸ்  அதிகாரி, நடிகருடன் படம் பிடித்துக் கொள்ளலாமா?

சிலர் என்ன செய்தாலும் செய்தியாகிவிடும் . மெரின் ஜோசப் அந்தப் பட்டியலில் வருபவர். ஐபிஎஸ் பயிற்சி காலத்திலேயே தலைப்பு  செய்தியில் வந்தவர். காரணம்,
போலீஸ்  அதிகாரி, நடிகருடன் படம் பிடித்துக் கொள்ளலாமா?
Updated on
2 min read

சிலர் என்ன செய்தாலும் செய்தியாகிவிடும் . மெரின் ஜோசப் அந்தப் பட்டியலில் வருபவர். ஐபிஎஸ் பயிற்சி காலத்திலேயே தலைப்பு  செய்தியில் வந்தவர். காரணம், அவரது அழகுதான், பல கேரளா இளைஞர்கள்,""மெரின்  கைது  செய்வார் என்றால் நாங்கள் கை நீட்ட ரெடி'' என்று குறும்பு கலாட்டாப் பதிவினை  முகநூலில் பதிவு செய்திருந்தார்கள். இந்தச் செய்தியைப் போடாத இந்திய பத்திரிகைகள்  இல்லை. ஒளிபரப்பாத  டிவி  சானல்களும் இல்லை.  நல்ல வேளை... மெரின் எர்ணாகுளத்தில் பதவி ஏற்றுக்கொண்டதும், எந்த இளைஞனும் என்னைக் கைது செய்யுங்கள் என்று மெரின் முன் போய் நிற்கவில்லை.

மெரினுக்குத் திருமணம் ஆன போதும், அவரது திருமணத்தைப் பல சானல்கள் ஒளிபரப்பின.

இப்போது மெரின் மீண்டும் செய்தியாகி இருக்கிறார் .  இந்தச் செய்தியில் மலையாள  ஹீரோ நிவின் பாலிக்கும் பங்குண்டு.

சமீபத்தில் எர்ணாகுளத்தில்,மெரின் ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து  கொண்டார். இதர சிறப்பு விருந்தினர்கள் நேரம், "பிரேமம்'  புகழ் நிவின் பாலி மற்றும்  எர்ணாகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஹிபி ஏடன்.

விழாவின் இடையே, மெரின் ஓர் ஆர்வத்தில், ஹிபி ஏடனிடம் நிவின் பாலியுடன்    சேர்த்து தன்னை ஒரு படம் எடுக்கச் சொல்ல, ஹிபியும் மெரினின் வேண்டுகோளை  நிறைவேற்றினார். அந்தப் படத்தை, ரண்ற்ட் சண்ஸ்ண்ய் டஹன்ப்ஹ்...ற்ட்ங் ஸ்ரீன்ழ்ழ்ங்ய்ற் ள்ங்ய்ள்ஹற்ண்ர்ய் ண்ய் ஓங்ழ்ஹப்ஹ, என்ற  தலைப்புடன் தன் முகநூலில் பதிவு செய்ய சில விநாடிகளில் ஆயிரக்கணக்கான லைக்குகள் பதிவாயின. 

கூடவே, மெரினுக்கும் சரியான தலைவலி வந்து சேர்ந்தது. சீருடையில் இருக்கும் போலீஸ் அதிகாரி, நடிகருடன் படம் எடுத்துக் கொள்ளலாமா?  ஒரு சட்ட மன்ற  உறுப்பினரைக்  கொண்டு படம் பிடிக்கச் சொன்னது  சரிதானா?.. அப்படியே எடுத்தாலும் அதை முகநூலில் பதிவேற்றம் செய்யலாமா?

விவாதங்கள்...  விமர்சனங்கள்...  எல்லா திசைகளிலிருந்தும்.

வேறு வழி இல்லாமல் மெரின் விளக்கம் சொன்னார்: ""அந்த விழாவில் நான் ஒரு சிறப்பு  விருந்தினர். அதிகாரபூர்வமான வேலைகள் ஏதும் இல்லை. அப்படியான ஒரு சூழ்நிலையில்   அந்தப் படம் எடுக்கப்பட்டது.  இது ஒரு சாதாரண விஷயம். அதை சில பொறுப்பற்ற மீடியாக்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டன  

 ""போலீஸ் சீருடையில் இருக்கும்போது, அந்த அதிகாரியின் நடவடிக்கைகள் முறையானதாக  பொறுப்புள்ளதாக  இருக்க வேண்டும். மெரின் போனது போலீஸ் சீருடையில். சாதாரண  உடையில் போயிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்னை ஏற்பட்டிருக்காது'' என்ற  எதிர் விளக்கமும் பாய்ந்து வர, பிரச்னை, கேரளா போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குப் போக, ஒரு சட்ட மன்ற உறுப்பினரைப்  போட்டோகிராபராக ஆக்கலாமா?  என்று மெரினின் போட்டோ தொடர்பான எல்லா நடவடிக்கைகள் குறித்தும் கடிந்து  கொண்டார்களாம்.

மேலதிகாரிகளின் திட்டு,மெரினை மீண்டும் செய்தியாக்கிவிட்டது. இனி மெரினைப் பற்றிய அடுத்த செய்திக்கு  கேரளம் காத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com